உன் உலகம் விரியும்போது என் உலகம் உன் சின்ன கைகளுக்குள் மகிழ்ச்சியோடு சுருங்குகிறது!
என் நிகழ் அவள் வாயில் தின்பண்டங்களை (தின்பண்டம் என்று அவள் நினைப்பதை எல்லாம் ;-) )வாயில் வைக்க பழகிக்கொண்டு இருக்கிறாள். கூடவே எனக்கும் வந்து ஊட்டுகிறாள். என் வாயில் இருப்பதை தோண்டுகிறாள். குக்கர் விசில் சத்தம் கேட்கும்போது கிச்சனில் இருந்தால் பயப்படுகிறாள். வெளியில் இருந்தால் கெகெகெ வென சிரித்துகொண்டே மேலேறி வந்து உட்காருகிறாள். கிரேசி பிராக் பாடல் வந்தால் இமைக்காமல் பார்க்கிறாள். திரும்ப போடச்சொல்லி உம் உம் மென சொல்கிறாள். பூச்சாண்டி பாடலும் அவளுக்கு மிக பிடிக்கிறது. நாம் வேலையாக இருந்தால் பக்கத்தில் வந்து எட்டி பார்த்து சிரிக்கிறாள். எல்லாரையும் நிமிடத்தில் மயக்கி விடுகிறாள். ஏதாவது சொன்னாலோ, கதை சொன்னாலோ புரிந்தது போலவே தலை ஆட்டுகிறாள்.
இவளுக்கு சொல்லித்தரவே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பு ஆதிரை..
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..
கிரேசி ப்ராக் மாதிரி பாடல்களின் தாளம் குழந்தைகளின் கவனத்தை வெகுவிரைவில் கவர்கின்றன..
//உன் உலகம் விரியும்போது என் உலகம் உன் சின்ன கைகளுக்குள் மகிழ்ச்சியோடு சுருங்குகிறது!//
இதை மிகவும் ரசித்தேன் நான்!!
வர்ட் வெரிபிகேஷனை எடுத்திடுங்க!! :-)
இதை நானும் அனுபவித்து வருகிறேன் என் அமித்துவின் மூலமாக
குழந்தைகளின் உலகமே அலாதிதான்
Post a Comment