Tuesday, December 2, 2008

நடக்கும் குட்டி தேர்!!!

நிகழ் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள். உடலை சாய்த்து, மெல்ல அடி எடுத்து அவள் வைப்பது தேர், அன்னம், குழந்தை கண்ணன் இன்னும் என்னென்னவோ இனிமையான விசயங்களை நினைவூட்டுகிறது. ஓடிச்சென்று அள்ளிகொள்கிறேன். அவள் ஓடிவந்து கால்களை கட்டிகொள்ளும்போது, வாழ்க்கை மிக இனிமையான ஒன்றாக இருக்கிறது.
அவளுக்கு ஊட்டிவிடும்போது, பிடிவாதம் பிடித்து தானே கையில் வாங்குகிறாள். கீழே கொட்டப்போகிறாள் என்று நினைத்தால், அதை ஊதி (சூடாக இருக்கிறதாம் ) நமக்கு ஊட்டுகிறாள். யாராவது வீட்டு அழைப்பு மணி அழுத்தி விட்டால், அவர்களை திரும்ப போக விட மாட்டேன் என்கிறாள். ( டோர் டெலிவரி செய்ய வருபவர்களை கூட ). பெரியவர்களை எல்லாம் மாமா என்கிறாள். பெண்களை, வயதானவர்களை இன்னும் ஒன்றும் சொல்வதில். சின்னவர்களை எல்லாம் அக்கா என்கிறாள். அண்ணா அக்கா வித்தியாசம் தெரியவில்லை. வேண்டுமென்றே முட்டிவிட்டு சுவரை அடிக்கிறாள். குடலை வுருவிடுவேன் என்று கையிலேயே கத்தியை திட்டுகிறாள்.
நான் மிக சந்தோசமாக இருக்கிறேன்.

3 comments:

அமுதா said...

/*உடலை சாய்த்து, மெல்ல அடி எடுத்து அவள் வைப்பது தேர், அன்னம், குழந்தை கண்ணன் இன்னும் என்னென்னவோ இனிமையான விசயங்களை நினைவூட்டுகிறது.*/
தாய்மையின் பூரிப்பு தெரிகிறது. நிகழுக்கு வாழ்த்துக்கள்

பி.கு. word verification எடுத்து விடுங்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்
நிகழுக்கும், ஆதிரைக்கும்.

ம், அனுபவியுங்க்ள்.
உங்களோடு சேர்ந்து நாங்களும்.

ச.பிரேம்குமார் said...

நடக்கும் குட்டித் தேருக்கு வாழ்த்துக்கள்

'நிகழ் ஆதிரை'... அடடே.. எத்தனை அழகான பெயர் :)