Friday, January 9, 2009

இவங்களுக்கு எல்லாம் சிரிப்பா வராதா?

முதல் முறையாக இங்கு பொது விஷயம் பற்றி எழுதுகிறேன். நிகழுக்கான இடம் தானே இது என்று யாரேனும் கேட்கலாம். ஆம். இந்த சமுதாயமும் என் நிகழுக்கானது தானே?
திருமங்கலம் தேர்தல் ரொம்ப ஆரவாரமா நடக்குதுப்பா!!! யார் யார் என்னென்ன கொடுக்கிறாங்கன்னு டி வி ல இவங்க அவங்களப் பத்தியும் அவங்க இவங்கள பத்தியும் மாத்தி மாத்தி சொல்றாங்க. எல்லாரும் கொடுப்பது எல்லாருக்கும் தெரியும். அவங்களுக்கு தெரியும், நமக்கு, தேர்தல் கமிஷனுக்கு, போலிசுக்கு (நான் காமெடி கீமெடி பண்ணலியே?) ஏன் சின்ன பிள்ளைக்கு கூட தெரியும். ஆனா இவர் பேசும்போது அவங்களையும், அவங்க பேசும் போது இவங்களையும், எவ்ளோ உணர்வு பூர்வமா ஆத்திரத்தோட ஐயோ இப்படியும் அநியாயம் நடக்க கண்டமான்னு நிஜமாவே வயிறு எரியிற மாதிரி பேசுறாங்களே, இவங்களுக்கெல்லாம் மேடைல அப்பிடி பேசும்போது சிரிப்பு சிரிப்பா வராதா?

2 comments:

அமுதா said...

/*இவங்களுக்கெல்லாம் மேடைல அப்பிடி பேசும்போது சிரிப்பு சிரிப்பா வராதா?*
சிரிப்பு மனுஷங்களுக்கு மட்டுமே உரியது :-))

ரிதன்யா said...

வரும், வராதுன்னு யார் சொன்னா?
நம்பள மாதிரி ஆளூங்கள பார்க்கும் போது வரும் ஆனா சிரிக்கமுடியுமா? அதனால தான் இராத்திரி நேரம் கூட்டம் வைப்பாங்க.